368. ஞாநியும் பூணூலும் - கி.அ.அ.அனானி
இந்த மேட்டர் கி.அ.அ.அ விடமிருந்து நேற்று வந்தது. பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! எப்போதும் போல கி.அ.அ.அனானி பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) !
Please read: http://govikannan.blogspot.com/2007/10/blog-post_25.html
எ.அ.பாலா
***********************************
அடைப்புக்குள் இருப்பவை மேல் சொன்ன பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கள்.
/////
ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும்.
ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது.
//////
கோவி கண்ணனின் திரிப்பு இங்குதான் ஆரம்பமாகிறது.ஞானியின் எழுத்துக்களில் பார்ப்பனீயம் இல்லை என எந்த பார்ப்பனர் இவரிடம் கொடி பிடித்தார்களோ தெரியாது.ஆனால் ஞானி பார்ப்பனர் அதனால் இப்படி எழுதினார் என்ற இவர்களது "ஞானிக்கு பூணுல் அணிவித்து அதன் மூலம் பார்ப்பனரை ஒட்டு மொத்தமாக கொச்சைப் படுத்தும் முயற்சிதான் எதிர்க்கப் படுகிறது" என்றே நான் நினைக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் அந்தக் கட்டுரையைப் படித்து முதலில் ஆர்ப்பாட்டம் பண்ணி அலறித் துடித்து அவரது சட்டைக்குள் பூணுல் தேடியவர்கள்தான் உண்டே ஒழிய ஆஹா ஞானி சரியாக எழுதி விட்டார் என்று எந்தப் பார்பனரும் கொடி பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை.
இதில் வெளிப்படும் பாசிச தொனி தெளிவாகவே இருக்கிறது ... இந்த விஷயத்தில் பார்ப்பனர் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அதோடு "பார்ப்பனர்கள்" யாரும் ஞாநியின் வாசகர்களாக இருக்கவே முடியாது என்ற கோணல் பார்வையும் வெளிப்பட்டிருப்பதும் நன்மையே, கோவியின் நோக்கம் இதில் பல் இளிக்கிறது. இதே பதிவில் சாதியை துறக்க நினைப்பவர்களை எண்ணி கோவி பெரிதாக அங்கலாய்த்து விம்மியிருப்பது நல்ல நகை முரண்.
//////ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? //////
யாருக்கும் ஞானி மீது பாசம் பொத்துக் கொண்டு வந்ததாக தெரியவில்லை.ஏற்பில்லாத கருத்தை சொல்பவனிடம் தூண்டித் துருவிப் பார்த்து அவன் பார்ப்பனன் என்று எதன் மூலமாகவேனும் பார்ப்பனர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என காட்டி அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் மூர்க்கத்தனம்தான் கண்டிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
/////////தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது.////////
காமாலைக் கண்ணுக்கு அப்படிப்பட்ட பதில்தான் கிடைக்கும்..ஏனெனில் ஞானி பார்ப்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என வரிந்து கட்டிய அனைவரும் பார்ப்பனர் மட்டும்தானா? என யோசிப்பதை வசதியாக மறந்து விட்டு தயார் செய்த பதிலுக்கு கேள்வி தேடினால் அது இப்படித்தானே இருக்க முடியும்? அப்படியானால் மருதையனை பார்ப்பனர் என்று தூற்றிக் கொண்டு அலைந்ததே இதே கூட்டம் அப்போது யாரானும் பார்ப்பனர் வந்து ஐயோ ,பார்பனரை தூற்றுகிறானே என்று மருதையனுக்கு பரிந்து வந்து வரிந்து கட்டி கொடி பிடித்தார்களா என்ன என்ற கேள்விக்கு கோவி கண்ணனிடம் உண்மையான பதில் இருக்காது.
/////"ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்."/////
கோவி கண்ணனும் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டத்தான் இவ்வாறு கருத்து சொல்கிறார் என்று அடுத்தவரும் கூறலாமல்லவா?.
///////கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது/////
இப்படி சொல்லும் கோவி கண்ணனுக்கு சொல்வதெல்லாம் இது கவலைக்குரியது மட்டுமல்ல கயமைத்தனமும் கூட.இந்தக் கயமைத்தனம்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது.""... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி "" என்று எள்ளுவதன் மூலம் ஆதரவளித்தவர் அனைவரும் பார்ப்பனர் என்று நேரடியாகச் சொல்லாமல் (அதுவும் ஞானிக்கு ஆதரவா அல்லது அவர் சொன்ன கருத்துக்கு ஆதரவா அல்லது அவரது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்றும் சொல்லாமல்.) "ஆதரவளித்த" என்று பொத்தம் பொதுவாக சொல்லி பூணுல் அணிவித்து தூற்ற முயலும் இந்த அறிவுஜீவித்தனமான உத்தியும் உச்சகட்ட கயமைதான்.
கி.அ.அ.அனானி
***************************
*** 368 ***
7 மறுமொழிகள்:
My comment is the first comment for this post ;-)))))))
//கோவி கண்ணனின் திரிப்பு இங்குதான் ஆரம்பமாகிறது.//
இது எப்போதோ ஆரம்பித்து விட்டது.
தலைவர் கோவியின் பழைய பதிவுகளை எவ்வளவு தூரம் பின்னோக்கிப் பார்த்தாலும் அங்கே அவரது சந்தி சிரிக்கும்!
பாசிச பதிவர்களுக்கு இந்த பதிவு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.
இனிமேலும் இவர்களது ஜாதி வெறி தொடர்ந்தால், இப்போது ஆடுகிற ஆட்டம் கூட ஆட முடியமால் சந்தியில் சிங்கி அடிக்க வேண்டியதுதான்.
ராஜா,
நன்றி
கி.அ.அ.அனானி
அண்ணன் கோவியாரின் இந்த பதிவில் கேட்கும் பின்னூட்ட ஜால்ரா இரைச்சலுக்கு நடுவில் எனது கருத்து எடுபடாமல் போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் என் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன் ... வெளியிடுவீர்கள் தானே?
பாலா, நீங்கள் ஸ்டார் பதிவர் என்று அங்கீகாரம் வழங்கிய வவ்வால் யாரோ ஒருவர் கேட்ட கேள்விக்கு ... அது ஓட்டைக் கேள்வி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ... அளித்த பதிலில் தனது பார்ப்பன ... பார்ப்பனீய அல்ல :) .. வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.
//சாதி சான்றிதழ் கூட கொடுக்காம அலைய வைக்கிறது படிச்சு பட்டம் வாங்கின மேல் தட்டு வர்க்கம் எல்லாம் இந்த தயிர்சாதங்கள் தான்!
//
தயிர் சாதங்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட நலிந்த மக்களுக்கு எதிரிகள் என்கிறார் .. எப்படி? அம்மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்க விடாம அலைய வைத்து ... நல்ல நகைச்சுவையான கருத்து :) அவரது உள்மன விகாரகங்கள் ஒரு ஓட்டை கேள்விக்கு பதிலில் வெளி வந்து விட்டது.
அத்துடன் வவ்வால் தனது பின்னூட்டத்தில் அறிவுசீவித்தனமாக பல கேள்விகள் வேறு கேட்கிறார் ...
//உங்கள் வீட்டில் செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் சுத்தம் செய்வது யார்?
ஒரு பாம்பு திடீர்னு வீட்டில் வந்து விட்டால் யார் வந்து பிடிக்கிறார்கள்.
விவசாயம் செய்யும் விவசாயிகளை விடுங்க அங்கே தினமும் வேலை செய்து உங்களுக்கு சாப்பாடு கிடைக்க செய்வது யார்?
உங்கள் செறுப்பு அருந்து போனால் தைப்பது யார்?
சரி அது வேணாம் செத்துப்போனால் கூட உங்கள் உடம்பை உங்க சொந்தமே புதைக்குதா அதுக்கு ஒருத்தன் இருக்கானே அவன் யார்?
//
இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் ... இடஒதுக்கீட்டின் ஆதாயங்களை எக்காலத்திலும் எந்த சூழலிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் வாய் கிழிய பேசி தொங்கி கொண்டிருக்கும் வவ்வால் போன்றவர்கள் அல்லர் ... என்பது மட்டுமே.
//அது வரைக்கும் உங்காளுங்களுக்கு ஒரு இடமும் கிடையாது சரியா, 10 வருடம் அப்புறம் ... எந்த இட ஒதுக்கீடும் வேண்டும்!
அது வரைக்கும் எங்க வீட்டுல கக்கூஸ் கிளீன் பண்ண செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலை, செறுப்பு தைக்கும் வேலை, வயல் வேலைல எல்லாம் உங்காளுங்களுக்கு முன்னுரிமை தரோம் வாரிங்களா :-))
ஒரு சதவீதம் இருக்கும் ஒரு கூட்டத்தில 99 சதம் பேர் படிச்சு ... எல்லா வசதியும் அனுபவிக்கிறான், ஆனால் 99 சதம் இருக்கும் மக்களில் 1 சதம் கூட இன்னும் படிச்சு பதவிக்கு வரலை அதுக்குள்ளவே உங்களுக்கு அரிப்பு எடுக்குதே!
//
பின்தங்கியவர் முன்னேற வேண்டும் என்பதை விட அந்த 'கூட்டம்' வாழ்கிறதே என்ற எரிச்சலும் பொறாமையும் தெளிவாகவே தெரிகிறது.
அதே பதிவில் அதியமான் வவ்வாலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்:
///இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு.////
இட ஒதுக்கீடு இதே முறையில் தொடர்ந்தால் இன்னும் 1000 வருடமானாலும், மலம் அள்ளுபவர்களின் சந்ததிகள் படித்து நல்ல வேலையில் சேர முடியாது. மீண்டும் மீண்டும் 'கிரிமி லேயர்' மக்களின் வாரிசுகளே இட ஒதுக்கீட்டு சலுகைகளை வெக்கமில்லாமல் அனுபவக்கின்றனர். தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை, நடுத்தர மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்த மாணவர்களே அனுபவக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு பட்டியலில் இடம் பெறும் மாணவர்களின் பின்புலத்தை ஆரய்ந்து பாருங்கள். இட ஒதுக்கீட்டில் கிரீமி- லேயர்களை நீக்காவிட்டால், நீதி கிடைக்காது. வெறும் பேச்சும், வாக்குவாதுமும்தான் தொடரும்.
இட ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலே பாதி நியாயம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களிக்கே சலுகை என்றும் கொண்டுவரலாம்...
is this a safe haven for people who cannot post comments in other posts..is it not glaringly visible that you are posting ur own comments on your post..
//is this a safe haven for people who cannot post comments in other posts..is it not glaringly visible that you are posting ur own comments on your post..
//
I am startled by this stunning discovery ! But you are not the first :)
Pl. read this for enlightenment:
http://balaji_ammu.blogspot.com/2007/04/322.html
அனானி,
வவ்வால் நன்றாக எழுதுகிறார் என்பதற்கும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவரது கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல்லை !!!
Post a Comment